சினிமா செய்திகள்செய்திகள்

அஜித்தின் விசுவாசம் படக்கதை என்ன தெரியுமா?

விவேகம் படத்திற்கு பிறகு அஜித்தின் படம் என்னவாக இருக்கும். அந்த படத்தை இயக்குவது யாராக இருக்கும் என்கிற மில்லியன் டாலர் கேள்விகள் எழுந்து வந்தன. இந்தநிலையில், நேற்று அஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்க, விவேகத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அஜித் படங்களின் தலைப்பு எல்லாம் பாதி படத்திற்கு மேல் வளர்ந்த பின்னர் வெளியாகின. ஆனால் படம் துவங்கும் முன்னரே விசுவாசம் என அறிவித்துள்ளனர்.

முக்கியமாக, வியாழக்கிழமை செண்டிமென்ட்டை கடைபிடிப்பவர் அஜித் என்பதால், நேற்று அவரது புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு, வீரம், வேதாளம், விவேகம் படங்களின் வரிசையில் இந்தப்படமும் வி வரிசையில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசுவாசம் என்ற தலைப்பை கருத்தில் கொண்டு இந்த படமும் சென்ட்டிடிமென்ட் கதையில் தான் உருவாகும் என்று கணிப்புகள் எழுந்துள்ளன. அதாவது அஜித்தின் வீரம் படம் சகோதர பாசத்தை மையமாக கொண்டு உருவானது. வேதாளம், தங்கை பாசத்தை மையமாகக்கொண்டது, விவேகம் படம் மனைவி பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. அந்த வரிசையில், விசுவாசம் படம் பேமிலி சென்ட்டிமென்ட் கதையில் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close