சினிமா செய்திகள்செய்திகள்

நட்சத்திரங்களும் அவர்களின் படிப்பும்

 • தமிழகத்தின் முதல்வராக மூன்றுமுறை பொறுப்பேற்ற புரட்சி நடிகர் கும்பகோணத்தில் படித்தது மூன்றாம் வகுப்பு .(குடும்பத்தின் வறுமைக்காரணமாக )சினிமாவில் பிரபல மான பிறகு ஒரு ஆசிரியரை நியமித்து படித்தார்.
 • நடிகர்திலகம் சிவாஜிகணேசன் .விழுப்புரத்தில் அரசினர் துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரைப் படித்தார் வறுமை சூழ்நிலைக் கராணமாக நாடகங்களில் நடிக்கப் போய் விட்டார்.இவரதுதமிழ் ஆங்கில வசன உச்சரிப்பு பெரிய படிப்புகளையும் அசர வைத்தது
 • கமல் ஹாசன் சென்னையில் படித்தது எட்டாம் வகுப்பு வரை தான் நாடகம்.நடனம் .சினிமா என்று வந்துவிட்டார் . நிறைய புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது .
 • கமலின் ஆங்கில.உச்சரிப்பை.நேர்காணலை கேட்பவர்கள் இவர் எட்டாங்கிளாஸா என்பார்.
 • இசைஞானி இளையராஜா பண்ணைபுரத்தில் படித்தது எட்டாம் வகுப்பு வரைத்தான் .ஜோதிடர் தன் படிப்பைப்பற்றிசொன்னதை பொய்யாக்கவேண்டும் என்று மேற் கொண்டு படிக்க முயன்றார் முடியவி ல்லை .
 • ஆஸ்கர்நாயகன் ஏ.ஆர்.ரஹமான் கே கே நகரில் தனியார்பள்ளியில் பட்த்தது பிளாஸ் ஓன் மட்டும் தான் அதற்குமேல் படிக்க முடியவில்லை .குடும்பத்தில் வறுமை.ஸ்கூல்பீஸ் கட்டவில்லை என்று அந்தப் பள்ளி அவரைவெளி அனுப்பிவிட்டது .
 • ரஜினிகாந்த் பெங்களூரு வில் பியூசி படித்தார்.
 • விஜய்காந்த் பத்து பள்ளிகளில் பத்தாவது வரைப்படித்தார்.எப்படியா வது sslc படித்துவிடு என்று அவரது தந்தை சொல்ல.மதுரையில் ஒரு டூட்டோரியல் பள்ளியில் சேர்ந்து படித்தார் எஸ் எஸ் எல் சி பாஸ் பண்ணமுடியவில்லை ,அதனால் இவரிடம் யாராவது ஆங்கிலத்தில் பேசினால் நழுவி போய் விடுவார்.
 • தளபதி விஜய் விஷூவல் கம்யுனிகேஷன் படித்தார்.அப்போது லயோலா வில் சூர்யா விஜயின் ஜூனியர் .
 • தல அஜித்குமார் நூங்கம்பாக்கம் தனியார்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார்
 • சூர்யா எம் பி ஏ முடித்திருக்கிறார்.
 • சத்யராஜ் பியூசி கோவையில் படித்தார்.
 • நடிகை ஊர்வசி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடிக்க வந்துவிட்டார். அவரது குடும்பத்தில் யாரும்பட்டதாரி இல்லை.அவரின் படிக்கும் ஆசை மகள் மூலம் நிறைவேறுகிறது.
 • புன்னகை அரசி பள்ளிசென்றுபடித்த து மூன்றாம் வகுப்பு வரைதான் .காரணம் குடும்ப வறுமைதான், ஆனால் தம் தங்கைகளை படிக்க வைத்தார்.
 • கவியரசு கண்ணதாசன் படித்தது எட்டாம்வகுப்பு வரைத்தான் .குடும்பதி ல் அவர் எட்டாவது பிள்ளை.
 • ஆனந்தி ஹைத்ராபாத் தில் பிசினஸ்மேனேச்மெண்ட் படிக்கிறார்.
 • சிம்ரன் மும்பையில் பி.காம் படித்திருக்கிறார்.
 • நடிகை நந்திதா எம் பி ஏ முடித்திருக் கிறார்.
 • நடிகை ஸ்ரேயா பி ஏ ஆங்கில வரலாறு படித்திருக்கிறார்.
 • மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி பி ஏ பிஎல் படித்து வக்கீலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்..

–சபீதாஜோசப்

 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close