சினிமா செய்திகள்செய்திகள்

ரஜினி வருவது உண்மையா ?

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் .விரைவில் கட்சி பெயர் .கொள்கை அறிவிப்பேன் என்று சொல்லியுருக்கிறார்,  அவர் உடனே அறிவிக்காமல் இருப்பதைப்பார்த்து (அவரை அறிந்த சிலர் அவர் அரசியலுக்கு வரமாட்டார், என்று கதாசிரியரும்,தயாரிப்பாளரு மான ஒருவிஐபி , அறுதியிட்டு சொல்லியிருக்கிறார்;  தமதுபிரியமா”ன தயாரிப்பாளரிடம் ரஜினி சொல்லியவை ;

ரஜினிக்கு மிகவும் நெருக்கமான அந்தமனிதர் “என்னப்பா அரசியலுக்கு வருவீயா? என்று கேட்டபோது .தனது நலம்விரும்பிக்கு ரஜினி கொடுத்த பதில்;  ” அண்ணே அதெல்லாம் வர மாட்டேண்ணே. நமக்கு 6 மணிக்கு மேலே ஜாலியாயிருக்கணும், அதெல்லாம் அங்கே போனா நடக்குமா?  அப்படியே ஒருவேளை வரணும்னு முடிவு பண்ணி வந்தாலும் . பெரிய முதலாளிங்கதான் ரூல் பண்ணுவாங்க ,நமக்கு அது சரிப்படாது, நம்ம நல்லது செய்யணும் நெனைப்போம் .அதச்செய்யமுடியாம போகும் .” என்று (1994ல்) சொல்லி இருந்தார் . சரி அதே மனநிலையில் தான் ரஜினி இன்றைக்கு -கருணாநிதி, ஜெயலலிதா இல்லாதநிலையில் இருக்கிறாரா..? என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அவரது குருநாதர் பாலசந்தர் அவர் முன்வைத்த கேள்வியுடன் நிறைவு செய்வோம்,

” ரஜினி அரசியலுக்கு வந்து முதல்வரானால் மிக நன்றாகவே ஆட்சி நடத்துவார் என்பதே என் நம்பிக்கை .இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டி யுள்ளது .அரசியலில் நுழையஅருமை யான வாய்ப்பு (1996ல்) கிடைத்தும் அதை பயன் படுத்திக்கொள்ளாமல் இருப்பதன் மூலம் தான் ஒரு கிரேட்மேன் என்பதை ரஜினி உணர்த் தி விட்டார் .இந்த 25 வருடங்களில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாதஉயர்த் தை ரஜினி பிடித்துள்ளார். ஆனாலும்
அவர் அதை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தவில்லை.இது அவருக்கு இன்னொரு பெருமை.
அவர் என்வழி தனிவழி என்கிறார். அந்தத் தனிவழிஎன்னஎன்பதை அவர் தான் விரைவில் சொல்ல வேண்டும் ” நமக்கும் அவரிடம் அதே கேள்வி தான் .
-சபீதாஜோசப்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close