சினிமா செய்திகள்செய்திகள்
விஜ்ய் ஆண்டனி யின் காளி!

விஜய் ஆண்டனி படம் என்றாலே அதில் ஒரு கருத்து இருக்கும்.கதை என்று ஒன்று இருக்கும் , அதுவும் புது மாதிரியான கோணத்தில் கதைச் சொல்லப்பட்டிருக்கும்,அப்படியொரு மாறுபட்டகதையுடன் “காளி” உருப் பெற்றிருக்கிறது.
விஜய் ஆண்டனி பெண்களை மதிக்க கூடியவர். அவரது ஒவ்வொரு படத்திலும் மனிதநேசம்,பெண்கள்மேல் மதிப்பு, தாயைப் போற்றும் பாடல் ஒன்று இருக்கும். அம்மா பாசம் பற்றிய காட்சிகள் இருக்கும், தாய்பாசத்தை நேசத்தை சொல்லும் படங்கள் அன்று பிச்சைக்காரன்,இப்போது “காளி” சின்னவயதிலேயே தந்தையை இழந்தவர் விஜய் ஆண்டனி அவரது தாயார் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார் .எனவே தாயைப் போற்றும் காட்சிகளைபதிவு செய்கிறார்.அதே போல் மனைவியை இன்னொரு தாயாகஅன்புடன் மதிப்ப வர் . எனவே என் வெற்றிக்கு பின்னால் என்மனைவியிருக்கிறார், என்மனைவிக்கு நான் மூன்றாவது குழந்தை என்று காளி படவிழா சொன்னது உண்மையே. பாத்திமாவிஜய் ஆண்டனி தயாரிக்க .கிருத்திகா உதயநிதி படத்தை இயக்குகிறார், இதில் விஜய் ஆண்டனிஜோடியாக நாலு நாயகிகள் அஞ்சலி,சுனைனா,ஷில்பா,அமிர்தா,மஞ்சுனாத், நாசர்,யோகிபாபு,ஆர் கே சுரேஷ்,வேலாமூர்த்தி,ஜெயபிரகாஷ் மதுசூதனன்ரவ்,சித்ராலட்சுமணன் . ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
நடனம் ;பிருந்தாமாஸ்டர், கேமிரா: ரிச்சர்ட் m.நாதன் ,ஆர்ட் சக்திவெங்க ட்ராஜ் ,ஸ்டண்ட் சக்திசரவணன், எடிட்டிங் லாரன்ஸ்கிஷோர்,இசை விஜய் ஆண்டனி.பாடல்கள்;மதன் கார்க்கி,விவேக்.அருண்பாரதி, தமிழணங்கு , தயாரிப்பு நிர்வகம் : சாண்ட்ரா ஜான்சன் .
காளி எந்தமாதிரி படம் என்பது மே 18 அன்று உலகம் கொண்டாடும் . விஜய் ஆண்டனியின் வெற்றி மகுடத்தில் இன்னொரு வைரக்கல் இந்த காளி.
-சபீதாஜோசப்