சினிமா செய்திகள்

“‘சொல்வதெல்லாம் உண்மை’ தடையால் படம் எடுக்க முடியவில்லை!”-லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி

‘ஆரோகணம், ‘நெருங்கி வா முத்தமிடாதே’,‘அம்மணி’ படங்களைத் தொடர்ந்து இப்போது ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்லட்சுமி ராமகிருஷ்ணன் .

Image result for ஹவுஸ் ஓனர்

இந்த படத்தில், ‘பசங்க’ கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

சென்னை வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையான இந்த படத்தை, வித்தியாசமான ஒரு அணுகுமுறையுடன் வழங்குகிறார். ஒரு தீவிரமான காதல் கதையாக இருந்தாலும், படத்தில் பாடல்கள் கிடையாது, சென்னை வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காது. இதுதான் படத்தின் ஹைலைட் அம்சம்.

இந்தப் படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிய போது:-
Related image

“ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. சில காரணங்களால், அது தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் நான் யோசித்திருந்த நடிகர்கள் அவர்களின் கடமைகளில் பிஸியாகி விட்டார்கள். அதனால் இப்போது வேறு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய வேண்டியதாகிவிட்டது.

ஜூன் 10-ம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பு, ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கான தற்காலிக தடை உட்பட சிலபல காரணங்களால் திட்டமிட்டபடி படத்தை துவங்க முடியவில்லை. இப்போது பிரச்னைகள் ஓரளவுக்கு தீர்வுக்கு வந்த நிலையில் நாங்கள் ’ஹவுஸ் ஓனர்’ படத்தை ஆரம்பித்தோம்’’ என்கிறார்.

‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

 இந்த ‘ஹவுஸ் ஓனர்’ படத்துக்கு மகளிர் மட்டும்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற பிரேம் எடிட்டிங் செய்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்துக்கு பின்னணி இசை மட்டும் தேவைப்படுவதால் முழு படப்படிப்பையும் முடிந்தபின் இசையமைப்பாளரை உறுதி செய்வாராம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

 
Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close