Uncategorizedசினிமா செய்திகள்
25-வது படத்தில் 80 வயதுப் பெரியவராக விஜய் சேதுபதி!

‘சீதக்காதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அந்த படத்தில் மேக்கப் மேக்கிங் வீடியோ வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பான எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
விஜய் சேதுபதிக்கு இது 25-வது படம்.
இந்த படத்தில் நடிப்பதை தன் வாழ்நாள் பாக்கியமாக கருதுவதாக சொல்கிறார் விஜய் சேதுபதி.

“சீதக்காதி சிவாஜிசார் அல்லது கமல் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம். இந்த படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் ஆரம்பத்தில் சீதக்காதியில் நடிக்க தமிழ் சினிமாவில் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். அந்த நினைப்பு சாத்தியமாகாதபோது வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை நடிக்க வைக்க விரும்பினார். ஒத்துக் கொண்டேன்.

இந்த படத்துல நான்80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்றார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற மிகச் சிறந்த நகைச்சுவை படத்தை தந்த விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோரின் காம்பினஷனில், இதுவரை பார்க்காத ஒரு படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைக்கப்போகிறது.
இந்த படத்துக்கு கோவிந்த் மேனன் இசையமைக்கிறார். சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். Passion ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறார்கள்.
‘சீதக்காதி’ மேக்கப் மேக்கிங் வீடியோ:- Link – https://youtu.be/up340-rLgAU