சினிமா செய்திகள்

‘வால்டர்’ படத்தில் விக்ரம் பிரபுவோடு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஜாக்கி ஷெராப்!

 

விக்ரம் பிரபு  நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படத்தின்  தலைப்பு  ‘வால்டர்.’

வால்டரை அதிரடி ஆக்‌ஷன் படமாக  இயக்குகிறார்  அறிமுக இயக்குநர் யு. அன்பரசன்.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஜாக்கி ஷெராப்  இருவரும் சேர்ந்து  நடிப்பதால் இப்போதே படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா இயக்கத்தில் கழுகு 2 படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளிவர உள்ள இப்படத்தைத் தொடர்ந்து அதிக பொருட் செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள ‘வால்டர்’ படத்தையும் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

கதாநாயகி மற்றும் படத்தில் நடிக்கவிருக்கிற மற்ற நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் இன்னும் சில தினங்களில் தெரியப்படுத்துவோம் என்கிறது படக்குழு.

படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி  மதுரை கும்பகோணம் தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார்?

ஒளிப்பதிவு  –   சதீஷ்குமார் 

இசை –    அர்ஜூன் ரெட்டி படப் புகழ்  ரதன் இசையமக்கிறார்.

எடிட்டிங்  –   கோபிகிருஷ்ணா

கலை  –   A.R.மோகன் 

நடனம்  –  தஸ்தா, ஷெரிப்

சண்டை பயிற்சி  –    விக்கி

தயாரிப்பு  –   சிங்காரவேலன்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close