விவேக் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய விஜய். இன்னும் இரங்கல் அறிக்கை கொடுக்காத அஜித்!

234

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி காலமானார். அவரது திடீர் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.அவரது மறைவை பற்றி இன்னும் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.விவேக் அ மறைவின் போது விஜய் ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் இருந்தார், அவரால் நேரில் வர முடியவில்லை. நேற்று முன் தனம் விஜய் ஜார்ஜியாவில் இருந்து வீடு திரும்பினார்.சென்னை வந்ததும் முதல் வேலையாக விடியற்காலை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார். விஜய் மற்றும் விவேக் இருவரும் இணைந்து நடித்த படங்கள் ஏராளம், அவர்கள் கூட்டணியில் வந்த காமெடிகள் இப்போதும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

விவேக் மறைந்த நாளன்று சென்னையில் இருந்த அஜித் நேரில் வராததும், ஒரு இரங்கல் அறிக்கை தராததும் இன்னும் சர்ச்சையில் உள்ளது.