மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி@நடராஜ் இணைந்து நடிக்கும் ‘பகாசூரன்’ !

200

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும், ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G
அவர் , தனது ‘ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் ‘பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படத்திற்கு ‘பகாசூரன்’என்று பெயரிட்டுளார்.

இந்த ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி @ நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்தப்படத்தின் டைட்டில் லுக் ., சில தினங்களுக்கு முன் வெளியாகி பெருவாரியான ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
வருகிற செப்டம்பர் மாதம் ‘பகாசூரன்’ படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மோகன்.ஜியின் இயக்கத்தில் ‘பகாசூரன்’ தமிழ் திரையுலகில் அசகாயசூரனாக அதிரடி செய்யட்டும் !!