திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் 1303

19

🙏இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள் 1303

🙏மொத்தமுள்ள 27 பொறுப்புகளுக்கு112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

🙏தலைவர் பதவிக்கு போட்டியிடும்
ராமசாமி@முரளி,
T.ராஜேந்தர்,
P.L.தேனப்பன் ஆகிய மூவரும் முதல் முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்

🙏துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் 7 வேட்பாளர்களில் அணியின் சார்பில் போட்டியிடும்
சிவசக்தி பாண்டியன்
R.K.சுரேஷ், P.T.செல்வகுமார்
அடிதடி முருகன் இவர்களை காட்டிலும்
சுயேச்சையாக போட்டியிடும் சிங்காரவடிவேலன்
கதிரேசன் இருவரும் கடும் போட்டியாளர்களாக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
🙏கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், மன்னன், கே.ஜே.ஆர், சுபாஷ் சந்திரபோஸ் இடையில் கணிக்க முடியாத போட்டியாக உள்ளது
🙏பொருளார் பதவிக்கு அணியின் சார்பில் போட்டியிடும் கே.ராஜன்-சந்திரபிரகாஷ் ஜெயின் இருவருக்குமான போட்டி சந்திரபிரகாஷ் ஜெயின்-சுயேச்சையாக போட்டியிடும் JSK சதிஷ்க்குமான போட்டியாக மாறியுள்ளது

🙏நலம் காக்கும் அணி சார்பில் நேற்றைய தினம் வாக்களர்களுக்கு வழங்கப்பட இருந்த அன்பளிப்பை வழங்கவிடாமல் எதிர் அணி காவல்துறையில் புகார் செய்து தடுத்ததால் அவர்களுக்கான ஆதரவு வாக்கு நலம் காக்கும் அணிக்கு ஆதரவாக மாறியுள்ளது

🙏ஒட்டுமொத்தமாக ஒரே அணி வெற்றியை அறுவடை செய்வது சாத்தியமில்லை

🙏சுயேச்சைகள் ஆதிக்கம் துணை தலைவர் பதவியில் இருப்பதற்கு காரணம்”கரன்சி மழை” வளமாக சென்றந்ததே காரணம் என்கின்றனர்

🙏அரசியல் கட்சிகள் தேர்தலில் அதிகபட்சமாக ஒரு வாக்குக்கு 2000ம் ரூபாய் வரை இந்தியாவில் வழங்கியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 20,000 ம் ரூபாய் வரை கிடைத்துள்ளது

🙏60% வாக்காளர்கள் அன்பளிப்பு, கரன்சிகளை வேண்டாம் என கூறியுள்ளனர்

🙏இன்று நடைபெற்றுவரும் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தரப்பில் சுமார் 3 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது

🙏இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

🙏நாளை23.11.2020 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.